புதுப்பெண் தற்கொலை... அந்த டார்ச்சர் காரணமா? பகீர் சம்பவம்

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (20:57 IST)
தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரவி, இவரது மகள் தீபிகா, இஅவர் என் ஜினியரிங் படிப்பு முடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார்  என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது. 
நவீன் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கலியாணமாகி 10 நாட்களே ஆன நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தன் தாயின் வீட்டுக்கு வந்துள்ளா தீபிகா. அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
 
இதனைக் கண்ட பெற்றோர் மற்றும்,உறவினர்கள் , அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீபிகா இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து வாணியம்பாடி தாலூக அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போஹ்டு வேலூர் மாவட்ட துணைக் கலெக்டர் இந்த விசாரணையை தொடங்கியுள்ளார். திருமணமாகி 10 நாட்களிலேயே பெண் இறந்துள்ளதற்கு மனரீதியாக டார்ச்சல் எதுவும்  இருந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்