போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சரின் அறிவிப்புக்கு பின்னரும் தொடரும் வேலைநிறுத்தம்

வியாழன், 4 ஜனவரி 2018 (22:32 IST)
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஊதிய உயர்வை ஒருசில போக்குவரத்து சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பாதிவழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளதாகவும், இந்த ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அரசு மற்றும் பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்