வாகன போக்குவரத்து தடையின் பின்னணி என்ன??

வியாழன், 25 ஜூன் 2020 (13:40 IST)
தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை செய்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 2,865 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 8வது நாளாக கொரோனா பாதிப்பு 2000ஐ விட அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2865 பேர்களில் 1654 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின் பெயரில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் பின்வருமாறு, 
 
வாகனப் போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால் மண்டலங்களின் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாம்.
 
எனவே, வரும் 25.6.2020 முதல் 30.6.2020 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்