அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த நிலையில் உள்ளது?

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (22:03 IST)
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடந்த நிலையில் தற்போது மத்திய கிழக்கு கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின
 
இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடல் பகுதியை விட்டு விலகி செல்லும் என்றும்  அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அந்தமான் கடல் பகுதியில் தெற்கு பகுதியில் நிலவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இருப்பினும் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்