இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மிக முக்கியமான மைல்கல் என்று கூறப்படும் சந்திரயான் 2, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள உலகின் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திராயன் 2 செயற்கைக்கோள் இந்திய தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம். நிலவில் மெதுவாக தரையிறங்கும் செயற்கைக்கோளை உருவாக்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையும் இந்த செயற்கைகோளால் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த நேற்று காலை 6.51 மணிக்கு கவுன்டவுன் தொடங்கியது. சந்திரயான் 2 இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் தினமலர் நாளிதழோ சந்திராயன் விண்ணில் ஏவப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதுவும் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக.