நீட் தேர்விற்கு நான் ஒருபோதும் தடை கொடுக்க மாட்டேன்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

சனி, 12 ஆகஸ்ட் 2023 (12:56 IST)
நீட் தேர்வு தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த மசோதாவிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.  
 
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெற்றோராக நீட் தேர்வு தடை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் என்று ஒருவர் கேள்வி எழுப்பியபோது நீட் தேர்வுக்கு ஒருபோதும் நான் தடை கொடுக்க மாட்டேன் என்றும் நமது குழந்தைகளை கஷ்டத்திற்கு ஆழ்த்த நான் விரும்பவில்லை என்றும் கூறினார். 
 
நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும்போதே நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யலாம் என்றும் அவர் கூறினார். 
 
நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக அரசு ஒருபக்கம் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் நீட் தேர்வுக்கு தடை கொடுக்க மாட்டேன் என உறுதிப்பட கவர்னர் ஆர்.என்.ரவி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்