நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில், மாலை 7 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். கோடை விடுமுறையை ஊட்டியில் கழிக்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.