கண்டெய்னர் ரயில் காணாமல் போனதா? – ரயில்வே அளித்த விளக்கம்!

புதன், 15 பிப்ரவரி 2023 (10:58 IST)
நாக்பூரிலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று மாயமானதாக வெளியான தகவல் குறித்து ரயில்வே விளக்கமளித்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள மிஹான் என்ற இடத்திலிருந்து 90 கண்டெய்னர்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்களை ஏற்றிக் கொண்டு கடந்த 1ம் தேதியன்று சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை சென்றடைய வேண்டிய அந்த ரயில் 13 நாட்களாகியும் இலக்கை சென்றடையவில்லை என தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. கடைசியாக அந்த ரயில் ஊம்பர்லி ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், பின்னர் மாயமானதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே நிர்வாகம் “நாக்பூர் – மும்பை இடையே பயணித்த சரக்கு ரயில் காணாமல் போனதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. வாசகர்களுக்கு ஒரு செய்தியை வழங்கும் முன்னர் அதன் உண்மை தன்மையை சோதிக்கவும்” என கூறியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்