பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 20 ஜூன் 2024 (15:24 IST)
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை என நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், ‘நெல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா நாளை அதாவது ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த நாளில் அரசு பொதுத் தேர்வுகள் இருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்’ என கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்