சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த கம்யூனிஸ்ட் கட்சி: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்.

Mahendran

வெள்ளி, 14 ஜூன் 2024 (19:10 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் பெண் வீட்டார் திடீரென அந்த கட்சியின் அலுவலகத்தில் புகுந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் திடீரென அந்த அலுவலகத்திற்கு பெண் வீட்டார் சுமார் 30க்கும் மேற்பட்டோர் புகுந்ததாகவும் அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் நாற்காலிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

இதனையடுத்து நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு அக்கட்சியின் பிரமுகர் கே பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட ஜாதி சங்கத்தை சேர்ந்த சிலரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டாருடன் சேர்ந்து சூறையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்