நீட் தேர்வை ரத்து செய்க – நடிகர் சத்யராஜ் கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (12:29 IST)
நடிகர்களுக்கு சாப்பாடு போடுங்கள், தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என நடிகர் சத்யராஜ் பரபரப்பு பேட்டி.


உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் இன்று ஈரோட்டில் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது சமூகத்தில் உள்ள மிகப்பெரிய தவறு நடிகர்களை பெரிய விஞ்ஞானிகள், அறிஞர்கள்  என நினைத்துக் கொள்கிறார்கள். நடிகர்களுக்கு சாப்பாடு போடுங்கள், தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாக தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் ஒன்பது லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தேர்ச்சி விகிதம் 56.3 சதவீதம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் அவர்களில் சுமார் பாதி பேர் மட்டுமே அதாவது 67,787  பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தின் தேர்ச்சி பெற்றும் 51.3 சதவீதம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்