திமுகவின் நீட் ரத்து முயற்சி படுதோல்வி அடைந்து விட்டதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்பேட்டி அளித்துள்ளார்.
திமுகவின் நீட் தேர்வு ரத்து முயற்சி படுதோல்வி அடைந்து விட்டதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார் என்றும் நீட் தேர்வு எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்கவில்லை என்றும் எனவே திமுகவின் உண்ணாவிரதம் போராட்டமே ஒரு படுதோல்வி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் ரத்து என்ற தேவையில்லாத வாக்குறுதியை திமுக கொடுத்துள்ளது என்றும் கட்சியின் வலிமையை காட்டுவதற்காகவே மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்று உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆளுநர் எங்கு போட்டியிட வேண்டும் என திமுக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த யாத்திரை காரணமாக பாஜகவின் வாக்கு வந்து உயரும் என்றும் அவர் கூறியுள்ளார்.