புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தேர்வு

Webdunia
சனி, 28 மே 2016 (15:44 IST)
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. ஆனால் யார் முதலமைச்சர் என்ற இழுபறி ஒருவார காலமாக நீடித்து வந்தது.


 
 
இந்நிலையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி, நமச்சிவாயம், வைத்திலிங்கம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
 
இந்நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ஷீலா தீட்சித் மற்றும் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
 
இதனையடுத்து இன்று நடந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை நமச்சிவாயம், வைத்திலிங்கம் ஆகியோர் முதல்வராக முன்மொழிந்தனர்.
 
புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயாண சாமிக்கு கட்சி நிர்வாகிகள் வழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்