புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:43 IST)
புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என அம்மாநில முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 350 மதுபான கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்றும் ஆறு மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என்றும் கூறியிருந்தார்.
 
 மதுபான ஆலைகளுக்கு அரசு மேலும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன என்றும் இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் புதுச்சேரியில் சாராயக் கடல் ஓடும் என்றும் அவர் கூறினார் 
 
கோவில்கள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் அருகே இருக்கும் மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்றும் நீதிமன்றம் சென்றாவது மதுபான கடைகளை புதிதாக திறப்பதை தடுத்து நிறுத்துவோம் என்றும் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்