இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
வடதமிழகத்தில் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியினால், இன்று வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ளது.