கனிமொழி பிரச்சாரம் செய்ய சுற்றுகிறாளே இவளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்?: நாஞ்சில் சம்பத்தின் அநாகரிக பேச்சு

Webdunia
வியாழன், 12 மே 2016 (11:48 IST)
அதிமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருமையில் பேசியுள்ளார்.


 
 
பல தொலைக்காட்சி பேட்டிகளின் போது ஏடாகூடமாக பேசி அதிமுக தலைமையால் கண்டிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் சில காலம் மௌனமாக இருந்தார். தற்போது தேர்தல் காலம் என்பதால் சூறாவளியாக பிரச்சாரம் செய்து வருகிறார் அவர்.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாஞ்சில் சம்பத் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை ஒருமையில் பேசினார்.
 
திமுகவில் உள்ள கனிமொழி, காலையில் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் மாலையில் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். இது எவ்வளவு அப்பட்டமான பொய், ஆதாரமற்ற பொய் என்று கூறிய நாஞ்சில் சம்பத், காலை, மாலை என்று பார்க்காமல் தமிழகம் முழுவதும் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய சுற்றுகிறாளே, இவளுக்கு பாதுகாப்பு அளிப்பது யார்? இவளுக்கு ஜெயலலிதாவின் போலீஸ்தான் பாதுகாப்பு அளிக்கிறது என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்