ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதில் ஒரு எம்எல்ஏ மற்றும் ஒரு எம்பி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணன் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்