அரசு வேலை வாங்கி தருவதாக கூரி பலரிடம் அவர் பண மோசடி செய்திருந்ததாகவும், தன்னிடம் கூட ரூ.20 லட்சம் வரை அவர் பண மோசடி செய்துள்ளார் எனவும் நந்தினி கூறியிருந்தார். மேலும், வேறு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக எனது கணவரை போலீசார் கைது செய்தனர். இது எனது குடும்பத்தினருக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. எனவே, நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்”என கூறியுள்ளார்.
ஆனால், தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனின் டார்ச்சர்தான் காரணம். நந்தினியிடம் என்னை பேசவிடாமல் அவர் என்னை தடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.