நாமக்கல் தொகுதியில் கூட்டணி கட்சியின் ஆதரவால் வெகு எளிதாக ஜெயித்து விடலாம் என கொங்கு மக்கள் தேசிய கட்சி நினைத்திருந்த நிலையில் தற்போது திமுக கோஷ்டி மோதல் காரணமாக கலக்கமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொங்கு மக்கள் தேசிய கட்சியின் மாதேஸ்வரன் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் கொங்கு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டதால் உள்ளூர் திமுகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் வேலை செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி திமுகவின் கோஷ்டி மோதல் இங்கு இருப்பதால் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்சியை ஜெயிக்க வைப்பதால் நமக்கு என்ன பலன் என்று திமுக மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக தெரிகிறது.
மேலும் உள்ளூர் திமுக பிரபலங்களான ராஜேஷ் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் இடையிலான கோஷ்டி பூசலும் தாறுமாறாக இருப்பதால் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வெற்றி வாய்ப்பு பறிபோகி விடுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேபி ராமலிங்கம், அதிமுக சார்பில் தமிழ்மணி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கனிமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.