போத்தீஸ் நிறுவனத்திற்கு சீல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி

செவ்வாய், 22 ஜனவரி 2019 (17:34 IST)
தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் கிளைகளை கொண்ட போத்தீஸ் நிறுவனம் நாகர்கோவிலிலும் 7 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இந்த நிலையில் இந்த கட்டிடம் நகராட்சியின் அனுமதியை மீறி 7 மாடிகள் கட்டியதாக நகராட்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

நகராட்சி நிர்வாகம் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற போத்தீஸ் நிறுவனம் சீல் வைக்க தடை உத்தரவை பெற்றது. ஆனால் இந்த தடை உத்தரவை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீக்கியது. எனவே எப்போது வேண்டுமானாலும் போத்தீஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் நாகர்கோவில் போத்தீஸ் வணிக வளாகத்திற்கு விதிகளை மீறி கட்டிடம் கட்டியதற்காக நகராட்சி சீல் வைத்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்