1.4 டன் எடையுள்ள வெடிகுண்டு: ஜெர்மெனியில் பரபரப்பு!!

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (17:36 IST)
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மெனி நாட்டின் மீது அமெரிக்கா பல சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியது. 


 
 
ஜெர்மனியில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் பல வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. வருடத்திற்கு 2,000-த்துக்கும் அதிகமான வெடிகுண்டுகளை ஜெர்மனி அதிகாரிகள் கண்டுபிடித்து செயலிழக்க வைத்து வருகின்றனர்.
 
அந்த வகையில், 1.4 டன் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த 65,000 மக்களை வெளியேற்றினர்.

வெடிகுண்டை செயலிழக்க செய்யும் வரை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்