அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கியது: நாகை மாவட்ட விவசாயிகள் கவலை!

புதன், 10 நவம்பர் 2021 (10:00 IST)
அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கியது: நாகை மாவட்ட விவசாயிகள் கவலை!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மூழ்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் விளைநிலங்களும் வெள்ள நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டத்தில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பாலையூர் என்ற பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது
 
அந்த பகுதியில் உள்ள அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அறுவடை நேரத்தில் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்து வருகின்றனர் என்பதும் அரசு அவர்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்