ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுவது ஏன்?

செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:56 IST)
கன மழை பெய்யும் காலங்களிலும் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ரெட்அலர்ட் விடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரெட்அலர்ட் விடுக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
அபாயத்தை உணர்த்தும் குறியீடாக ரெட்அலர்ட் பார்க்கப்படுகிறது. மக்கள் தங்களுடைய உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவை ஏற்படும் மோசமான வானிலை என்பதை குறிப்பதற்காகவே ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் மக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்