நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே.
பார்த்ததைப் பயின்றதைப் பழகி நடந்தால் நாளை நமதே
நிலமும் நீரும் பொதுவெனப் புரிந்தால் நாளை நமதே
எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே
மூத்தோர் கடனை இளையோர் செய்தால் நாளை நமதே
அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே
சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால் நாளை நமதே
முனைபவர் கூட்டம் பெருகிவிட்டால் நாளை என்பது நமதே, நமதே
கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே, நிச்சயம் நமதே
தமிழர், தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே, நிச்சயம் நமதே..