ஜம்மு காஷ்மீரில் 5 வீரர்கள் இறந்த விவகாரம்: பிஏஎப்எப் அமைப்பு பொறுப்பேற்பு..!

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (14:56 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வெடித்து சிதறியதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினார் என்பதும் அதில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிஏஎப்எப் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ டிராக் மீதான தாக்குதலில் ஐந்து வீரர்கள் இறந்த விகாரத்தில் ராணுவ வாகனத்தின் கீழே வெடிகுண்டு பொருத்தப்பட்ட படங்களை பிஏஎப்எப்  அமைப்பு வெளியிட்டுள்ளது. 
 
மேலும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதோடு எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என விவரித்துள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்