இதனைத்தொடர்ந்து, இம்ரான்கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவரை போலீஸ் லைன் விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுவார். அவர் கைதியாக கருதப்படமாட்டார். அவரது பாதுகாப்பை போலீஸார் உறுதிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதில், போஸீஸாருக்கும் அவரது கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 25 போலீஸார் காயமடைந்தனர். இதுகுறித்து, இம்ரான் மீது போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.