தி.மு.க.வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட்: என்ன காரணம்?

செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (08:02 IST)
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் தருமபுரியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி முல்லைவேந்தன் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்
 
சமீபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணிக்கு தனது  ஆதரவினை தெரிவித்து அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்ததாக  செய்திகள் வெளிவந்தது, இதனால் திமுகவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முல்லை வேந்தன் பின்னர் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தேமுதிகவில் இணைந்தார். கருணாநிதியின் மறைவுக்கு பின் மீண்டும் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார் முல்லைவேந்தன். இருப்பினும் அவருக்கு கட்சி உரிய மரியாதையை தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் பாபிரெட்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட முல்லைவேந்தன் விரும்பியதாகவும், ஆனால் விருப்பமனுவையே பெற வேண்டாம் என்று திமுக தலைமை கூறியதாகவும் தெரிகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த முல்லைவேந்தனை சமீபத்தில் பாமக அன்புமணி ராமதாஸ் சந்தித்தபோது அவருக்கு ஆதரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்தே அவர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்