பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு “மதுரையில் பாதாள சாக்கடை கழிவுகள் குடிநீரில் கலப்பதற்கு காரணம் கழிவு நீர் குழாய்களுக்குள் கிடக்கும் நெகிழி பைகள்தான். அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து மக்களுக்கு தேவையான நீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையில் அதிமுக அரசு அலட்சியம் காட்டுவதாக சொல்வது ஆதாரமற்ற பேச்சு. அதிமுக வை விமர்சிக்கும் தகுதி திமுகவுக்கு இல்லை. ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிறைவேறாத திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்” என பேசியுள்ளார்.