அம்மா கண்முன்னே மகன் வெட்டிக்கொலை!

புதன், 7 நவம்பர் 2018 (16:58 IST)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் வசித்து வந்தவர் நூர் முகமது. இவர் தன் தாயுடன் வசித்து வந்ததுடன் அருகிலுள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவந்தார்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நூர் முகமது தன் தாயுடன் வீட்டில் இருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றது.
 
இந்த நிலையிலும் தன் உயிரை காப்பாற்ற தப்பி ஓடிய அவரை விடாத கும்பல் மீண்டும் துரத்தி வெட்டிக் கொன்றது.
 
வீட்டுக்கு வெளியே நடந்த இக்கொலையால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் தன் கண்முன்னே மகனை இழந்த வேதனையில் தாய் கதறி அழுதது அந்தப் பகுதியை சோகத்தில் ஆக்கியுள்ளது.

கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்