குழந்தைகளுக்கு பிறந்த பின் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் அளிக்க வேண்டியது தாய்மாரின் கடமை. குழந்தைகள் திட உணவை உண்ண தொடங்கும் நிலையில் கூட அவர்களுக்கு சத்துள்ள, உடலின் உறுப்புகள், உள்ளுறுப்புகள் மற்றும் அவர்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நிலைப்படுத்த உதவும் உணவுகளை அளிப்பது அவசியம்.
குழந்தை இருக்கும் இடம், குழந்தையை தொடும் நபர்கள், குழந்தாய் எடுத்து விளையாடும் பொருட்கள் மற்றும் தவழ்ந்து விளையாடும் இடங்கள், படுத்து உறங்கும் இடம் என அனைத்து பகுதிகளும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் அவர்கள் உண்ணும் உணவு மிக சுத்தமான பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என சரிபார்ப்பது அவசியம்.