ரூ.95ஐ நெருங்கியது பெட்ரோல் விலை: செஞ்சுரி அடிப்பது எப்போது?

வெள்ளி, 14 மே 2021 (06:34 IST)
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று ஒருநாள் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதும் அதற்கு முன்னர் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இன்று பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.94.09 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் 32 காசுகள் உயர்ந்து 87.81 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. தற்போது பெட்ரோல் விலை ரூ95ஐ நெருங்கிவிட்ட நிலையில் இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்
 
மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து பெட்ரோல்,டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்