விளையாட்டுக்காக கூட ரிஸ்க் எடுக்க வேண்டாம்: பிக்பாஸ் நடிகை

செவ்வாய், 24 மார்ச் 2020 (14:28 IST)
இந்த நேரத்தில் விளையாட்டுக்காக கூட யாரும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரில் ஒருவரும் நடிகையுமான மதுமிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
 
 
தற்போது நாம் அனைவரும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். பொருளாதார ரீதியாகவும் மக்கள் உயிர்பலி அதிகரிப்பு காரணமாகவும் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போயுள்ளன. இந்த நோய் பரவாமல் இருக்க ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு முறை கையை கழுவ வேண்டும். கையை கழுவாமல் வாய் மூக்கு உள்பட எந்த உறுப்பையும் கைகளால் தொடக் கூடாது. தும்மும் போதும் இருமும் போதும் கண்டிப்பாக கர்சீப் பயன்படுத்த வேண்டும் 
 
எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். 144 தடை உத்தரவை யாரும் விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாம். 144 தடை உத்தரவு நேரத்தில் தயவுசெய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மிக அத்தியாவசியமான பொருள் தேவைப்பட்டால் மட்டும் வீட்டில் இருக்கும் ஒரு நபர் வெளியே வந்து தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
 
சிலர் விளையாட்டுக்காக 144 தடை உத்தரவை மீறினால் என்ன நடக்கும் என்று நினைத்து வெளியே வர முயற்சிக்கலாம். ஆனால் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கால் உங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயமே பாதிப்பு அடையும். அனைவரும் வீட்டில் இருந்து நம்முடைய அன்பான குடும்பம், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். முக்கியமாக வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று மதுமிதா கூறியுள்ளார்
 

My opinion about 144 in Tamilnadu #TamilNadulockdown #CoronavirusLockdown#Corona@johnmediamanagr pic.twitter.com/6FJ7Xy9Kuo

— Actor Madhumitha (@ActorMadhumitha) March 24, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்