தமிழகத்தில் டெல்டா கொரோனாவால் 80% பேர் பாதிப்பு!

சனி, 28 ஆகஸ்ட் 2021 (15:37 IST)
தமிழகத்தில் டெல்டா வகை கொரோனாவால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை நந்தனத்தில் அரசு கல்லூரியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,  கல்லூரி, பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் தற்போது 80% பேர் டெல்டா வேரியட் வகை கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனவே அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறி மக்களை மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வலியுறித்தினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்