தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு!

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:27 IST)
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் , செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தமிழகம் மற்று காரைக்கால் பகுதிகளில் மிதனமா மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

தற்போதுசென்னையில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்