ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் மூலம் கணக்கீடு செய்வது எளிதாக இருக்கும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கட்டணத்தை செலுத்துவது மக்களுக்கு எளிமையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், தி.மு.க. மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. மேலும், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த திட்டம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
தேர்தல் நெருங்கி வருவதால், மாதாந்திர மின் கட்டண முறையை சோதனை அடிப்படையில், சில பகுதிகளில் முதலில் தொடங்க வேண்டும் என மின் வாரிய அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருவதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறை, மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.