கோவிலுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் !!

கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள கணபதியை வணங்க  வேண்டும்.
 


இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும். மூன்றாம் முறை வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி,  துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.
 
சண்டீகேசுவரரை வழிபாடு செய்தால்தான் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம். இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது  நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.
 
கோவில் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி எரிய வைத்தல், புதிய விளக்குகளை ஏற்றி வைத்தல், சிறியதாக எரியும் விளக்கு திரிகளை சரி செய்து எரிய தூண்டுவது  போன்றவை புண்ணிய காரியமாக கருதப்படுகிறது.
 
முடிந்தால் சனிக் கிழமையில் கோயில் தீபங்களுக்கு நல்லெண்ணெய் வாங்கித் தாருங்கள். இதனால் சனி தோஷம் அகலும். சிவன் கோவில்களில் முதலில்  சிவனை வழிபட்ட பிறகே சக்தியை வழிபட வேண்டும்.
 
விஷ்ணு கோவிலுக்குச் சென்றால் முதலில் மகாலட்சுமியை வழிபட்ட பிறகே விஷ்ணுவை வணங்க வேண்டும். விஷ்ணுவை வழிபடும் போது முதலில் பாதத்தை  பார்த்து படிப்படியாக முகம் வரை பார்த்து வணங்க வேண்டும். மகாலட்சுமியை வணங்கும் போது முதலில் கண்களை பார்த்து படிப்படியாக பாதம் வரை பார்த்து  வழிபாடு செய்தல் வேண்டும். அதுவே ஆகம விதி.
 
ஆலயத்தில் இருந்து வீட்டுக்கு புறப்படும் போது சற்று அமர்ந்து செல்ல வேண்டும். ஏனெனில் சிவாலயங்களில் இருக்கும் 7 சிரஞ்சீவிகள் தங்கி இருந்து சிவதரிசனம்  செய்பவர்களை அவர்கள் வீடு வரை பின்தொடர்ந்து வந்து மரியாதை செய்வதாக சொல்வார்கள். இவ்வாறு முறைப்படி ஆலய தரிசனம் செய்தால் முழுப்  பயனையும் பெற முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்