தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

Siva

திங்கள், 17 ஜூன் 2024 (13:25 IST)
தொட்டிலில் தூங்கிய  24 நாள் குழந்தையை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் கடலூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் என்ற பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 24 நாட்கள் மட்டும் ஆன இந்த குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த நிலையில் வினோதினி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று திடீரென தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறிவிட்டு ஓடிவிட்டது. இதனை அடுத்து குழந்தை உயிருக்காக போராடிய நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் 14 தையல்கள் போட்டுள்ளதாகவும் இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றி திரிவதாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை குரங்குகள் கடித்து தொல்லை படுத்துவதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்