நீட் ஆள்மாறாட்ட வழக்கு – மாணவனின் தந்தை போலி மருத்துவரா ?

புதன், 2 அக்டோபர் 2019 (13:55 IST)
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவன் இர்பானின் தந்தை முகமது சஃபி போலி மருத்துவர் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து தருமபுரியை சேர்ந்த டாக்டர்.சஃபியின் மகன் முகமது இர்ஃபான் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. தருமபுரி மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்த இவர் மொரிசியஸ் தப்பி சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவில் இருந்து இர்பான் பற்றிய தகவல்கள் மொரிசியஸுக்கு அனுப்பப்பட்டு இர்ஃபானை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப மொரிசியஸ் அரசாங்கம் சம்மதித்தது.

இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இர்பானின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி மருத்துவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் மருத்துவப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் என்பதி சிபிசிஐடி போலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்