தாயின்றி அழைந்த யானைக்குட்டி: பத்திரமாக தாயிடம் சேர்த்த அதிகாரிகள் – வைரல் வீடியோ

செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:54 IST)
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தாயை பிரிந்த யானைக்குட்டி ஒன்றை அதன் தாய் யானையிடமே வன அதிகாரிகள் கொண்டு சேர்த்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சத்தியமங்கலம் காட்டுப்பகுதி புலிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் தாய் யானையை பிரிந்த யானைக்குட்டி ஒன்று தனியாக அலைந்து வந்திருக்கிறது. இதை கண்ட பொதுமக்கள் சிலர் வன அதிகாரிகள் சிலருக்கு தகவல் சொல்ல அவர்கள் அந்த யானையை மீட்டிருக்கிறார்கள்.

காட்டுப்பகுதியில் யானைகள் நடமாடும் பகுதியின் அருகே குட்டியை அழைத்து சென்றுவிட தீர்மானித்த அவர்கள் ஒரு வழிகாட்டி மூலம் அந்த யானைக்குட்டியை காட்டிற்குள் கொண்டு விட்டார்கள்.

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிந்துள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, அந்த வனத்துறை அதிகாரிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். வழிகாட்டி முன்னே செல்ல எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவரை அப்படியே யானைக்குட்டி பின் தொடர்ந்து செல்லும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

This lil lady strayed into private farms bordering #Sathyamangalam #TigerReserve. Forest Watchers spotted her & after a bit of coaxing she was reunited with her mom & the #herd by our #forest officials. #GoodJob

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்