தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரேசன் அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில பகுதிகளில் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றது. மேலும் பொங்கல் பை தொகுப்பு பொருட்கள் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.