ஸ்டாலினைப் புகழ்ந்த பாஜக மூத்த தலைவர் : திமுகவுடனான கூட்டணிக்கு அறிகுறியா ?

வியாழன், 5 செப்டம்பர் 2019 (16:22 IST)
தமிழக அரசியலில் எதிரும் புதிருமான இருப்பது இரு திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தான்.  சமீபத்தில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சரியான பதிலடி கொடுத்தார். இப்படி அரசியலில் அடுத்தடுத்து  விமர்சனக் கனைகள் கொடுத்துக்கொண்டிருக்கும் வேலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியுள்ளது அரசியலில் தலைவர்களிடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று, திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் பேசும்போது,

’கலைஞர் அவர்களின் மகன் ஸ்டாலின் சாமிநாதனுக்கு திருமணம் செய்துவைத்து, இன்று அவரது மகனது திருமணத்தையும் நடத்திவைத்திருக்கிறார். கலைஞருக்கு பின்னர் ஸ்டாலின் தளபதியாக மட்டுமின்றி எங்களை வீழ்த்திய தளபதி அவர். இன்னும் நாங்கள் உழைக்க வேண்டும் என எனக்களுக்கு உணர்த்தியுள்ளார், மணமக்களுக்கு இனிதே வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என தெரிவித்தார்.’ விழாவில் கலந்துகொண்ட மக்கள் அவரது பேச்சுக்கு ரசித்து கைதட்டினர்.
இதனையடுத்து பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், எங்களை வீழ்த்திய வெற்றித்தளபதி என்று சி.பி. ராதாகிருஷ்ணன் ’என்னை’ கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நாங்கள் உழைத்தோம், மக்கள் பாஜவை வீழ்த்தினார்கள் என சாமர்த்தியமாக பேசி கூட்டத்தினரிடம் கைதட்டல்களை பெற்றார். 
 
இந்நிலையில் அரசியல் ஆடுகளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இதனால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனெவே இன்று காலையில், அமைச்சர் ஜெயக்குமார்,  செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது : ப . சிதம்பரத்தின் கைதுக்குப் பின் மு.க. ஸ்டாலின் பேச்சில் மென்மை கூடியுள்ளதாகவும், அவர் மத்திய அரசை அதிகாக விமர்சிக்கவில்லை எனவும் கூறினார்.
 
இதற்குக் பதிலடி தரும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி : ஸ்டாலின் குரலை ஆராய்வதுதான் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேலையா என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இன்று பாஜக மூத்த தலைவர் ஸ்டாலினைப் பாராட்டியுள்ளது அரசியல்  நோக்கர்களை யோசிக்கவைத்துள்ளது. 
 
அநேகமாக மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்பதற்கான அச்சாணியாகவும், அடுத்துவரவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி விஸ்தாரமாக அமையக்கூடுமெனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்