மேலும் 3 தமிழக அமைச்சர்கள் வெளிநாடு பயணம்: ஸ்டாலின் சொன்னது சரிதானா?

வியாழன், 5 செப்டம்பர் 2019 (08:00 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. அவர் லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவருடன் ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் தற்போது ஆர்பி உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகிய அமைச்சர்களும் இணைந்துள்ளனர் 
 
 
இந்த நிலையில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அங்கு கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டறிந்து தமிழகத்தில் செயல்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மொரிஷியஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் என்பவர் சமீபத்தில் ரஷ்யா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
மேலும் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு முறை பயணமாக இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் இன்று எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதேபோல் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்களும் சிங்கப்பூர் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘தமிழக அமைச்சர்களா? சுற்றுலா அமைச்சர்களா? என்று கேள்வி எழுப்பிய வகையில் தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளனர். இதனையடுத்து ஸ்டாலினின் கேள்வி சரிதானோ? என்று எண்ண தோன்றுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்