முதல்வர் ‘எடுபிடி’ மன்னிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி: கேலி செய்த ஸ்டாலின்; சிரித்த திமுகவினர்!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (14:41 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எடுபிடி பழனிச்சாமி என கேலி செய்தது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நேற்று மதுராந்தகத்தில் திமுக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சின் இடையே, “தற்போது வந்துள்ள ‘எடுபிடி’ மன்னிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த 5 திட்டங்கள் ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள்தான். மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் எங்கு இருந்தன என அறிவிக்க எடப்பாடிக்கு திராணி உள்ளதா?’’ என விமர்சித்தார்.
 
ஸ்டாலின் தனது பேச்சின் இடையே எடப்பாடியை எடுபிடி என கூறியதால் கூட்டத்தில் இருந்த திமுகவினர் விழுந்து விழுந்து சிரித்தனர். இது அதிமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஸ்டாலின் பினாமி ஆட்சி என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்