கருணாஸ் தகுதி நீக்கத்திற்கு திட்டமிடுவது இதற்காகத்தான்: மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தகவல்

புதன், 3 அக்டோபர் 2018 (07:39 IST)
முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கவும், அவருடைய எம்.எல்.ஏ பதவியை பறிக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: , எம்எல்ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசிப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். எம்எல்ஏக்களாக இருந்த 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி வரப்போகின்ற நேரத்தில் புதிய பதவி நீக்கத்தை வைத்து பதவி காலத்தை ஓட்டி விடலாம் என அடுத்த தகுதி நீக்கத்திற்கு திட்டமிடுவதாக தெரிகிறது.

அதற்காக, நடுநிலை தவறாதவராக இருக்கவேண்டிய சட்டப்பேரவைத் தலைவரை பயன்படுத்துவது பாரம்பரிய மரபைக் கேலிக் கூத்தாக்கும் செயல். தமிழக அரசு நிர்வாகத்தை அ.தி.மு.க அரசிடமிருந்து மீட்டு, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இழந்துவிட்ட செழிப்பினை மீண்டும் பெற குடியரசுத் தலைவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்