கருணாஸின் பதவி இருக்குமா? பறிபோகுமா..?

செவ்வாய், 2 அக்டோபர் 2018 (19:03 IST)
ஆளும் அதிமுக அரசின் தயவால் தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காமெடி நடிகர் கருணாஸ்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மற்றும் காவல் துறை உயை அதிகாஅர் ஒருவரை தரக்குறைவாக பேசியதால் அவர் கைது நடவடிக்கை பாய்ந்தது.இதனையடுத்து போலீஸ்ஸார் அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
 
அதன் பின்பு ஐ.பி.எல்.போராட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த கருணாஸ் தன் மீது இருமுதல்வர்களும் பொய்வழக்கு போட்டு தன்னை பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கூவத்தூர் தொடர்பான உண்மையை கூறவும் தாயாராக இருப்பதாகவும் தைரியமாக பேசினார்.
 
இந்நிலையில் நெற்று சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் ஆலோசனைநடத்தியதாக தெரிகிறது .
 
அதன் படி எம்.எல்.ஏ.கருணாஸின் கீது நடவடிக்கை மற்றும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று செய்திகள்வெளியாகிறது.
 
அ.தி.மு.க.கட்சி சார்பில் கருணாஸ் போட்டியிட்டு ஜெயித்திருந்ததால், கட்சி சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்