பிரதமர் பேசுனதுக்கும், நிதியமைச்சர் அறிவிப்பிற்கும் சம்பந்தமே இல்லை! – மு.க.ஸ்டாலின்!

வியாழன், 14 மே 2020 (08:48 IST)
கொரோனாவால் இந்தியாவே முடங்கியுள்ள சூழலில் நிதியமைச்சரது அறிவிப்புகள் பிரச்சினைகளை தீர்க்க போதுமானதாக இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் மூன்று கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள பிரதமர் மோடி அது சற்று வேறுபட்டதாக இருக்கும் என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 20 லட்சம் கோடி அளவிலான நிதி அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பிரதமர் மோடி அறிவித்த பிரம்மாண்ட மீட்பு திட்டத்திற்கும், நிதியமைச்சரின் அறிவிப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது அறிக்கை ஏழை. எளிய மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அவற்றிற்கு போதுமான நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்