எனது அரசு தோழர்களுக்கான அரசு..! – மே தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஞாயிறு, 1 மே 2022 (13:01 IST)
இன்று மே தினத்தில் சென்னையில் உள்ள மே தின பூங்காவில் முதல்வர் மலரஞ்சலி செலுத்தினார்.

இன்று மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிபேட்டையில் அமைந்துள்ள நினைவு சின்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர் “ஆரம்ப காலம் முதலே திமுக அரசு ஏழை தொழிலாளர்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. முந்தைய திமுக ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டில் தொழிலாளர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் மேலும் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 90 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கம்யூனிசத்தை ஆதரித்து அனைவரையும் தோழர் என அழைக்க சொன்னவர் பெரியார். ரஷ்யா சென்று வந்த அவர் அப்போது குழந்தைகளுக்கு லெனின், மார்க்ஸ், ரஷ்யா என்றும் பெயர் வைத்தார். எனது தந்தையும் அந்த வழியிலேயே எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார்.

எனது அரசு என்றும் தோழர்களின் அரசாக செயல்படும். உழைப்பாளர்களின் நலனில் திமுக என்றென்றும் தனி கவனம் செலுத்தி வருகிறது” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்