அரசின் முரண்பாடால் மாணவர்களின் எதிர்காலம் வதைபடுகிறது: மு.க.ஸ்டாலின்

புதன், 9 செப்டம்பர் 2020 (20:34 IST)
அரசின் முரண்பாடு காரணமாக மாணவர்களின் எதிர்காலம் வதைபடுகிறது என முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீட் தேர்வால் இன்னொரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரியலூர் மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது வேதனையாக இருப்பதாகவும் இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
மேலும் மாணவர்களுக்கு எனது அன்பு வேண்டுகோள் என்றும், எத்தனையோ சோதனைகள் வந்தாலும் அதனை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள் என்றும் தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
முன்னதாக நீட் தேர்வுக்கு தயார் ஆன அரியலூர் மாணவர் விக்னேஷ் மன அழுத்தம் காரனமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்