இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளை சேர்ந்தவர்கள். இணைய வழிக் கல்விக்கு தேவையான ஸ்மார்ட்போன், மடிக்கணினி, இணைய வசதி போன்ற தொழில்நுட்ப வசதிகள் கிராமப்பகுதிகளில் அதிகமாக கிடையாது. இதனால் இணையவழி கல்வி நடத்துவது இயலாத காரியம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்களும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புறத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் குறைவு என்பது ஒருபுறமிருக்க, இதுநாள்வரை பள்ளி வகுப்பறையில் கூட்டமாக அமர்ந்து விவாதித்து படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தனியறையில் அமர்ந்து படிப்பது கற்றல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துமா என்றும் கேள்வியெழுந்துள்ளது.