தனியார் வேலைவாய்ப்புகளுக்கான அரசு இணையதளம்! – எடப்பாடியாரின் அசத்தல் ஐடியா!

புதன், 17 ஜூன் 2020 (10:20 IST)
தனியார் வேலைவாய்ப்புகளை மக்கள் எளிதில் அணுகும் வகையில் அரசு சார்பில் புதிய இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

பொதுவாகவே தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் தேடி இளைஞர்கள் பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பினால் பலரும் புதிய பணிகளை தேட வேண்டிய அவசியம் உள்ளது. அரசு வேலைகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்களும் குறைவாகவே உள்ளன, இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை மக்கள் எளிதில் அணுகும் விதமாக ஒரு புதிய தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

இந்த தளத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியிடங்கள், தகுதி குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் தங்கள் விருப்பமான பணியினை இந்த தளத்தில் தேடி விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தில் சென்று விருப்பமான பணிகளை தேடி பெற்றுக்கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்